புதன், 27 அக்டோபர், 2010

பனித்துளித் தூறல்கள்

பச்சை போர்த்திய பூமியை
ஓர் இரவில்
வெண்பனி போர்த்தி சொர்க்கமாக்கியது
கார்காலம்

திராட்சைக்காக   நாட்டிய பந்தலில்
பனி பூத்துக் குலுங்கியது
பனிக்கால ஆடைகளாய்
கனத்திருக்கும் மனத்தோடு
சொர்க்கச்சாலைகளில்  நடக்கின்றேன்
தொட்டுக்கொண்டுவரும் குளிர்காற்றாய்
நீயும் வந்துகொண்டிருக்கிறாய்

பனித்துளி பார்த்து தயங்காது
அள்ளி விளையாடும் சிறுமியாய்
சொல்லிவிடத் துடிக்கிறேன்
ஆனாலும்
வெண்பனி தொடத்தயங்கும் மனிதர்களாய்
பேச்சுக்கள் முடிகின்றன மனதோடுமட்டும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக