சனி, 9 ஏப்ரல், 2011

விதிகளுக்கு அப்பாற்பட்டவள்..


 
எல்லா 
விதிகளுக்கும் அப்பாற்பட்டவள் 
விதிவிலக்கு..

காட்சியாகும் அனைத்து 
தேவதைகளை விடவும்
அழகியவள்
தேவதைகளின் அரசி..

ஆயிரம் 
யசோதைகளாலும் யசோதரைகளாலும் 
உருவாக்கப்பட்டவள்
ஒப்பில்லாதவள்..

பால்வீதிகளின்
சாராம்சம்சம் சொல்லியபடி
பாலூட்டுவாள்..
வாழ்வுநியதிகளின்
வீதிகள் காட்டியும் வழிகாட்டுவாள்..

எந்தத் தூரிகைக்கும்
வசப்படாதது
அவள் வாசம்..

கோடானுகோடி
கவிதைகள் எழுதி
இப்பூமியை நிரப்புங்கள்
இன்னும் இருக்கும்
தாயின் பாசத்தின் மிச்சம்...


     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக