சனி, 9 ஏப்ரல், 2011

இயற்கையின் பாஷை..


 

நேர்கோட்டில்  செல்வதில்லை 
நதிகள்...
மனித வாழ்க்கையைப் 
பறைசாற்றியபடி 
வளைகிறது.

வேரோடி விழுதெறிந்து 
பூத்துக் காய்த்துக் கனிந்தாலும்
நிற்கின்றன விருட்சங்கள் 
நிலைபெயராமல் 
விழுமியங்களைத் 
தொட்டபடி..

சோர்வு என்பதே கிடையாதா
இந்த அலைகளுக்கு
எட்டி எட்டித் தொடத் துடிக்கின்றதே
எதையோ..
பாருங்கள் மனிதர்களே..

தன் அடியில்
நெருப்பை வைத்துக்கொண்டிருக்கும் 
எரிமலைகளும் கூட 
நிசப்தமாய்தான்  வீற்றிருக்கின்றன..
நூற்றாண்டுகள் தாண்டியும்.. 














     

1 கருத்து: